புத்தூர் – நவகிரியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

0
128

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் – நவகிரி பாடசாலைக்கு அருகில் வைத்து ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய ஆண் ஒருவர் 6950 மில்லிக்கிராம் கஞ்சாவை எடுத்துச் சென்றபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.