புன்னாலைக்கட்டுவனில் படையினரால் அமைக்கப்பட்ட வீதி இன்று ராணுவ தளபதியினால் திறந்து வைப்பு!

0
142

கட்டுவன் பகுதியில் படையினரால் அமைத்த வீதியினை இன்று நண்பகல் 12 மணிக்கு இராணுவத் தளபதி லித்தும் லியனகே  திறந்து வைக்க இரகசியமாக வருகை தருகின்றார்.

இதற்காக கட்டுவன் மயிலிட்டி  வீதியில் இராணுவத்தினர்  400 மீற்றர் நீளத்திற்கு மொத்தம் 8 ஏக்கர் நிலத்தை விடுவிக்க மறுத்து தனியாரின் நிலத்தில் இராணுவத்தினர் நில உரிமையாளர்களின் சம்மதம் இன்றி அமைத்த பாதையே இவ்வாறு திறக்கப்படவுள்ளது.

இவ்வாறு திறக்கும் பாதையினால் தனியாருக்குச் சொந்தமான மேலும் சில நிலம் இழக்கும் அபாயமும் ஏற்படும் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.