யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தினூடாக வருமானம் குறைந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தலா 20 ஆயிரம் ரூபா வீதம் புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தகைமையுடைய விண்ணப்பதாரிகள் கமநல சேவைகள் நிலையத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பெற்றோர் அங்கத்தவராக உள்ள கமக்கார அமைப்பு, தத்தமது பிரிவிற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர், மற்றும் கல்வி கற்கும் பாடசாலை அதிபரின் சிபாரிசுடன் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை உரிய கமநல சேவைகள் நிலைய, கமநல உத்தியோகத்தரிடம் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ தபால் மூலமாகவோ அனுப்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.