மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசப்வாஸ் பக்தி சபையினால் மூன்றாம் கட்ட நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அருட்தந்தை சி வி . அன்னதாஸ் அடிகளாரினால் மனித நேய பணிகளுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசப்வாஸ் பக்தி சபையினரால் இந்தப் பொதிகள் வழங்கப்பட்டன.
நாவற்குடா பங்குமக்களுக்கான உலர்வுணவு பொதிகளை பங்கு தந்தை திருச்செல்வம் அடிகளாரிடம் கையளிக்கப்பட்டதுடன் தொடர்ந்து குருக்கள்மடம் , காரைதீவு அக்கரைப்பற்று .திருக்கோவில் ,பொத்துவில் ஆகிய பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடுப்பிம்பங்களுக்கான உலர்வுணவு பொதிகளை அப்பகுதி ஆலய பங்கு தந்தையர்களிடம் கையளிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தொடர்ச்சியான பயணத்தடை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசப்வாஸ் பக்தி சபை வழங்கி வருகின்றனர்.