29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பூமியை கடக்கவுள்ள ஈபிள் டவர் அளவு உயரமுள்ள விண்கல்!

இன்று 1007 அடி உயரமுள்ள விண்கல் பூமியைகடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பூமியை நூற்றுகணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன.

இதில் அளவில் பெரியதாக உள்ள விண்கற்கள் மட்டும் பேசும்பொருளாக உள்ளது. அந்தவகையில் நேற்று பூமியை நான்கு விண்கற்கள் கடந்துள்ளதாக நாசா கூறியுள்ளது.

அதில் 2023 HW, 2023 HL2 என்ற விண்கற்களும் 90 அடி அளவு கொண்டன. மற்ற இரண்டு விண்கற்கள் 2023 GO1 & 2023 HH3 சிறிய அளவை கொண்டன. இவற்றை தவிர்த்து இன்று ஈபிள் டவர் அளவு உயரமுள்ள 2006 HV5 என்ற விண்கல் பூமியை கடக்கவுள்ளது.

சுமார் 1007 அடி உயரமுள்ள இந்த விண்கல் பூமியை 10 இலட்சம் கிமீ தொலைவில் மணிக்கு 62,723 கி.மீ வேகத்தில் கடக்க உள்ளது.

இந்த விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்து இல்லை என தெரிவித்த நாசா விண்கற்களின் அசைவுகள் கவனிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles