பெண் தொழிலாளியின் மரணத்துக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

0
108

பசறை – கோணக்கலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, பாம்பு தீண்டிமையால், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கோணக்கலை 10ம் கட்டைப்பகுதியில் இருந்து தேயிலை தொழிற்சாலை வரை பேரணியாக சென்ற அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 16ம் திகதி கோணக்கலை கீழ் பிரிவில் உள்ள தோட்டப்பகுதியில் பாம்பு தீண்டலுக்கு உள்ளாகியிருந்த பெண்தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

இதன்பின்னர் அவருக்கு பசறை மாவட்ட வைத்தியசாலையில் முதலுதவிகள் அளிக்கப்பட்டு சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

இதனையடுத்து குறித்த தொழிலாளியின் இறுதிகிரியைகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் குறித்த பெண் தொழிலாளி உயிரிழந்தமைக்கு நீதிக் கோரி பசறை கோணக்கலை மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.