பெரியநீலாவணையில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி

0
310

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணைக் கிராமத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் போது ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தொற்றாளர்களுடன் பழகியவர்கள்,வெளியிடங்களில் இருந்துவருகை தந்தோர்கள்,ஆகியோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பெரியநீலாவணைக் கிராமத்தில் இதுவரை 09 பேர் கொரோனா தொற்றக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறும் சுகாதாரப்பிரிவினர் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கல்முனை வடக்கு சுகாதாரப் பரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனையின் வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.கணேஸ்வரன் தலைமையிலான பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ச்சியாக கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.