பெரியநீலாவணையில் கொடுப்பனவு வழங்கல்

0
220

அம்பாறை பெரிய நீலாவணைக் கிராமத்தில் அரசினால் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவுகள்
பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.விமல்ராஜ் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டன.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைய கிராம உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி உத்தயோகத்தர் உள்ளிட்டோர் இணைந்து இந்த கொடுப்பனவை வழங்கி வைத்தனர்

பெரியநீலாவணை முதலாம் கிராமசேவகர் பிரிவில் 263 குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாவீதம் 13 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் முதற்கட்டமாக பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.