பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்ளத்தை ஆயிரத்து 700 ரூபாவாக அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த 7 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பள நிர்ணய சபையுடன் கலந்துரையாடி அந்த தீர்மானத்தை செயற்படுத்தத் தேவையான சட்டங்களை கொண்டுவரத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் தொழிற் சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்களுடன் கண்டி கரலிய மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு பல வருடங்களாக ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படவில்லை.
அவற்றை வழங்கும் பணிகள் அடுத்த வருடத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பளம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு 7 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.