மலையகப் பெருந்தோட்ட மக்கள் சஜித் பிரேமதாஸவின் பக்கமே நிற்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்கள் பக்கம் நிற்கும் வரை அவரால் மலையகப் பெருந்தோட்ட மக்களின் ஆதரவைப் பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.