பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

0
150

இரத்தினபுரி – பெல்மடுல்ல வீதி, ரில்ஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெல்மடுல்லயிலிருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த வாகனமொன்று, பாதசாரி பெண்ணொருவர் மீது மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

பெல்மடுல்ல பிரதேசத்தை சேர்ந்த 82 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.