பேராதனை பல்கலைக்கழகத்தின் 64 மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று ஏனைய மாணவர்களுக்கு பரவுவதைத் தடுப்பதற்காக மருத்துவ பீடத்தின் நுண்ணுயிர் துறை நிபுணர்களின் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.