அனைத்து மாகாண, அரைசொகுசு பேருந்து சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள, 430 அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அனைத்து மாகாண, தனியார் பேருந்து சங்கமும், அதன் 28 உறுப்பினர்களும் இணைந்து, தாக்கல் செய்துள்ள மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில், நேற்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்டது.
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தை, நேற்று முதல் இரத்துச் செய்வதற்கு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, மனுதாரர்கள் குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்தாக, நீதிமன்றிற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.