பேருந்து – பாரவூர்தி மோதி: 19 பேர் காயம்

0
11

தென் அதிவேக வீதியின் அபுருக்க மற்றும் பெலியத்தவுக்கு இடையேயான 138 ஆம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானார். 

சம்பவத்தில் 19 பேர் வரை காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

காயமடைந்தவர்கள் தங்காலை மற்றும் பெலியத்த ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் மத்தலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்தொன்று முன்னால் பயணித்த பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.