நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதியை விசேட தினமாக அறிவித்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனப் பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடெங்கும் உள்ள 22 மாவட்டங்களில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அன்றைய தினம் தங்கள் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் தங்கள் பிரதேச தபால் நிலையங்களுக்கு நேரில் சமூகமளித்து தங்களுக்கான வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.