பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே புதிய சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது – எஸ்.எம்.சந்திரசேன

0
149

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்பது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே கொண்டுவரப்படுகின்றது என்று அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

‘உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள், மதக் குழுக்கள், மதத்தலைவர்கள் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

சமூகத்தில் பாரிய ஒடுக்குமுறையை தோற்றுவிக்கும் சட்டமூலம் என்றும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

உண்மையில் இந்த சட்டமூலமானது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்படும் சட்டமூலமாகவே நாம் காணுகின்றோம் என்றார்.