பொது சுகாதார பரிசோதகர்களால் நாளை சுகயீன விடுப்புப் போராட்டம்!

0
173

பொது சுகாதார பரிசோதகர் சங்க தலைவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் பொதுசுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். புற்றுநோய் காரணிகள் அடங்கிய ‘திரிபோஷா’ மக்களுக்கு வழங்குவது தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோகனவை இலக்காகக் கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் சுகயீன விடுப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மத்திய குழு, மற்றும் செயற்குழு ஆகியவற்றில் இத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாக அதன் யாழ் மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் அறிவித்துள்ளது.