பொத்துவில்; செல்வவெளி வயல்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், சடலம் பிசிஆர் பரிசோதனைகளுக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேவேளை பிரேத பரிசோதனைகளின் பின்னரே முழுமையான அறிக்கைகளை வெளியிட முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொத்துவில் 15 களப்புகட்டு விச்சுநகரைச் சோந்த 3 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய ஆஷ்ரப் என்றழைக்கப்படும் கயாத்து லெப்பை முகமது என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.