பொத்துவில் முதல் முதல் பொலிகண்டி வரையிலான உரிமைக்கான பேரெழுச்சிப் பேரணியின் இறுதி நாள் இன்றாகும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் கிளிநொச்சி டிப்போசந்தியிலிருந்து இறுதி இலக்கான பொலிகண்டியை நோக்கி பேரணி ஆரம்பமாகியுள்ளது. வழிபாடுகளுடன் இந்தப்பேரணி ஆரம்பமாகியுள்ளது.
பேரணி நகருவதற்கு முன்னதாக கிளிநொச்சியில் தொடர்ந்து போராடிவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ள உறவுகளுடன் இணைந்து கண்டனப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
இதன் பின்னர் கிளிநொச்சி நோக்கி நகரும் பேரணியானது நகரின் மையத்தை அடைந்து அங்கு கவனவீர்ப்புப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.