பொய் சொல்பவர்களே மிகப்பெரிய திருடர்கள் – விமல் வீரவன்ச!

0
14

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகக் கட்சித் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள கவனம் செலுத்தக்கூடிய ஒரு சில உள்ளுராட்சி சபைகளில் மாத்திரம் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் கள்வர்களைப் பற்றியே தெரிவித்து வந்தோம், ஆனால் இப்போது இருப்பவர்கள் பேராசிரியர் பொறியியலாளர் எனப் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்ட கள்வர்களே என விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.மேலும் பொய் கூறுபவர்களே மிகப்பெரிய திருடர்கள் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.