யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில், யாழ் பண்ணை பகுதியினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அதிகளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாநகர சபையினர் குறித்த பகுதியை சுத்தப்படுத்த தவறியதன் காரணமாக, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸாரினால் குறித்த பகுதியை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் காணப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் பொலிஸ் உத்தியோகத்தர்களால் சேகரிக்கப்பட்டு யாழ்.மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் உதவியுடன் அகற்றப்பட்டது.
இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமான பண்ணைப் பகுதியினை சுத்தப்படுத்தும் வேலை திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் கலந்துகொண்டு சுத்தப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.