பொலிஸார் தலையீடு காரணமாக த.தே.மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில் கைவிடப்பட்டது

0
78

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதியில் பொலிஸாரின் தலையீடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில் கைவிடப்பட்டது.

நேற்று முற்பகல் திருக்கோவிலில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி துண்டுப்பிரசுரம் வழங்கும் செயற்பாடு இடம்பெற்றது. இச் செயற்பாடு திருக்கோவில் பொலிஸாரினால் இடைநிறுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் தலைமையில் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோர் துண்டு பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.