பொலிஸ்மா அதிபரின் நியமனத்திற்கு எதிராக மேலும் இரு மனுக்கள்

0
110

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேஸபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதம் என தீர்ப்பளிக்குமாறு கோரி 02 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிரோஷன் பாதுக்கவினால் ஒரு மனுவும் பேராசிரியர் சாவித்திரி குணசேகரவினால் மற்றுமொரு மனுவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சபை உரிய அங்கீகாரம் வழங்கவில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.