பொலிஸ் வீரர் தினம் யாழில்சிறப்பாக இடம்பெற்றது!

0
114

159 வது வருட பொலிஸ் வீரர் தினம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.

கடமையின்போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நினைவுகூறும் வகையில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்

கலந்து கொண்டு ஏற்றியிருந்த பொலிஸ் திணைக்கள கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பூஞ்செண்டுகள் வைக்கப்பட்டு நினைவு கூரப்பட்டது.

இந்நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ்நிலைய உத்தியோகத்தர்கள், உயிரிழந்த பொலிஸ்நிலைய உத்தியோகத்தர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.