கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொது மக்கள் பொழுது போக்கு மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி டிப்போ சந்தியிலுள்ள இராணுவ நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தில் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயால் குறித்த பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
இலவச இணைய வசதிகளுடன் கூடிய குறித்த பூங்காவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி இராணுவ உயரதிகாரிகள் பொதுமக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.