மத ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் போதகர் ஜெரோம் பெர்னான்டோ வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள ஒரு மத வழிபாட்டுத் தலத்தின் நிறுவுனரும் போதகருமான ஜெரோம் பெர்னான்டோ அண்மையில் நடத்திய ஒரு வழிபாட்டு நிகழ்வின் போது பௌத்த, சைவ மற்றும் இஸ்லாம் மதங்களை அவமதிக்கும் வகையிலான கருத்தை தெரிவித்திருந்தார்.
குறித்த போதகரின் கருத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஜனாதிபதி இவ்வாறு உத்தரவு விடுத்துள்ளார். அவரின் கருத்து பிற மதங்களை புண்படுத்தும் வகையிலும் அவமதிக்கும் வகையிலும் இருப்பதாக பலரும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.