சட்டவிரோத போதைப்பொருள் பாவனை தடுப்பு மாவட்ட செயலணி கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ‘போதையற்ற நாடு சௌபாக்கியாமான தேசம்’ எனும் தொனிப்பொருளில் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட செயலணி கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
போதைப்பொருள் அதிகரிப்பினால் எதிர்நோக்குகின்ற சவால்கள் , போதைப்பொருள் பாவனையினை எதிர்காலத்தில் கட்டுப்படுத்தும் வகையில் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மாவட்ட ரீதியாக முன்னெடுத்துள்ள நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிகழ்வு இன்று நடைபெற்றது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மாவட்ட இணைப்பாளர் பி .தினேஸ் ஒழுங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரன் தலைமையில் நடைபெற்ற உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட செயலணி கூட்டத்தில் உதவி மாவட்ட செயலாளர் எ.நவேஸ்வரன் ,பிராந்திய உளவளத்துணை வைத்தியர் டான் , மாவட்ட களால் திணைக்களம் , மாவட்ட குற்றப்த்தடுப்பு பிரிவு ,வைத்திய அதிகாரிகள் , சிறைச்சாலை அதிகாரிகள் , முப்படையினர் , பிரதேச செயலாளர்கள் , அரச திணைக்கள அதிகாரிகள் உட்பட அரசசார்பற்ற நிறுவனங்களில் உத்தியோகத்தர்கள் ,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்
இதன்போது சட்டவிரோத போதைப்பொருள் பாவனை ,விற்பனை மற்றும் உற்பத்தி சம்பந்தமான முறைப்பாடுகள் மற்றும் உளவளத்துணை ,சிகிச்சை ,புனர்வாழ்வு தொடர்பாக தகவல்கள் பெற்றுக் கொள்ளவேண்டிய இலக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான அறிவித்தல் பலகை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டதுடன், 14 பிரதேச செயலக பிரிவுகளுக்கான அறிவித்தல் பதாகைகளும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது.