போதைப் பொருட்களுடன் பலர் கைது

0
117

கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில், நேற்று (09) மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக தெஹிவளை பொலிஸ் பிரிவு பராகும் மாவத்தை பிரதேசத்தில் 6 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோய்னுடன் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 60 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோய்னுடன் படோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 31 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு முகத்துவாரம் அங்குலான பொலிஸ் பிரதேசத்தில் 5 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அங்குலான பிரதேசத்தை சேர்ந்த 50 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பாணந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வடக்கு பிரதேசத்தில் 05 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கெசல்வத்த பிரதேசத்தை சேர்ந்த 40 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.