மறைந்த போப் பிரான்சிஸ் இந்தியாவிற்கு வர வேண்டும் என்பதை தனது ஆசையாக கூறியிருந்தார்.
2017இல் போப் பிரான்சிஸ் இந்திய விஜயம் இரத்தானது. அவர் பங்களாதேஷ் மியான்மாருக்கு சென்றார்.
2025ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் அதற்கு முன்பே அவர் இந்தியா வந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் போப் பிரான்சிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்யவில்லை.
இந்தியாவுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்ற அவரது வாழ்நாள் ஆசை நிறைவேறாமல் அவர் காலமானார்.