போரதீவுப்பற்றில் தேசிய மரநடுகை
தின சுற்றாடல் வேலைத்திட்டம்

0
218

சமுர்த்தி புசுமை நிற தாயக அறுவடை தேசிய மரநடுகை தின சுற்றாடல் வேலைத்திட்டம் இன்று போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். அத்துடன் உதவி பிரதேச செயலாளர் வி.துலாஞ்னன், சிவஸ்ரீ சாம்பசிவம் குருக்கள், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.குககுமரன், உட்பட வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட தலைவர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

சுற்றுப்புறச் சூழலில் பசுமையான, பயனுள்ள மரங்களை நடுவதன் மூலம் இயற்கை வளம், காட்டு வளம் ஆகியவற்றை பாதுகாத்தல் மற்றும் இயற்கையோடு ஒன்றித்த எதிர்கால வாழ்வியலை கட்டியெழுப்புதல், காட்டு வளங்களை அழிப்பவர்களுக்கு எதிராக எடுக்கப்படவேண்டியச ட்ட நடவடிக்கைகள் ஆகியன தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.