போர்க்குற்றங்களுடன் தொடர்புள்ளவர் என்பதால் “கோட்டா”வை சந்திக்க மாட்டோம்!

0
181

கோட்டபாய ராஜபக்ச நாட்டில் இடம்பெற்றதமிழருக்கெதிரான பல்வேறு பட்ட யுத்தக் குற்றங்களோடு தொடர்பு பட்டவர் சர்வதேச சட்டதிட்டங்களை தட்டிக்கழித்தவர் என்பதனால் அவரை சந்திக்க விரும்பவில்லை என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக தமிழர் பேரவையினர் தெரிவித்தனர்,

இந்த நாட்டினை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியவர் அத்தோடு அரசியல் ரீதியில் பெரும் பின்னடைவினை ஏற்படுத்தியவர் சர்வதேச சட்டங்களை மதிக்காதுசெயற்பட்டவர் நாட்டில் ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது மக்களின் எதிர்ப்பினால் தப்பி ஓடியவர் என்பதன் அடிப்படையில் அவரை சந்தித்து பிரியோசனம் இல்லைதானே

ஆனால் நாங்கள் ஏனைய அனைத்து அரசியல் தரப்பினரையும் சந்தித்து எமது நிலைப்பாட்டை விளக்குவோம் என உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சு, சுரேந்திரன் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்படி தெரிவித்தார்.