நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் பயணித்த பௌசர் ஒன்று நேற்று மாலை தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து ஹட்டன் வழியாக வெலிமடை நோக்கி பயணிக்கும் போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த பௌசரில் 33 ஆயிரம் லீட்டர் டீசல் மற்றும் பெற்றோல் வெவவேறாக பிரித்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மேலும் பெருமளவிலான எரிபொருள் வெளியேறி வீணாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பௌசர் கவிழ்ந்ததையடுத்து வழிந்தோடிய பெற்றோல், டீசலை பெருந்திரளான பொது மக்கள் சேகரித்ததை அவதானிக்க முடிந்தது.
குறித்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.