மகளின் கண் முன்னே நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து மாயமான தாய் சடலமாக மீட்பு

0
112

மகளின் கண் முன்னே டெவோன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை மகளின் கண் முன்னே டெவோன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து மாயமானவர், திம்புலபத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஏ.நிசாந்தனி என்ற நான்கு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக முறைப்பாடு ஒன்றினை செய்வதற்காக இரண்டு பிள்ளைகளுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஒரு பிள்ளையை பொலிஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு, பெண் பிள்ளையுடன் நீர் வீழ்ச்சிப் பகுதிக்குச் சென்று தனக்கு தாகம் எடுப்பதாக தெரிவித்து பெண் பிள்ளையிடம் குடிநீர் பெற்று வருமாறு தெரிவித்து குடிநீர் எடுத்துவரச் செல்லும்போது தம்பியை பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு கையைக் காட்டியவாறு நீர் வீழ்ச்சியில் பாய்ந்து குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணின் மகள் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த தாயினைத் தேடும் பணியினை இராணுவத்தினரும் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து முன்னெடுத்தபோது குறித்த பெண்ணின் சடலம் நீர் வீழ்ச்சியின் அடிவாரத்திலிருந்து மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை திம்புலபத்தன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.