மகளீர் போராளிகள் போன்ற ஆடை அணிந்த விவகாரம், அறுவரிடம் வாய்முறைப்பாடு பதிவு!

0
170

மகளீர் போராளிகள் போல ஆடை அணிந்த சம்பவம் தொடர்பில் அறுவரிடம் வாய்முறைப்பாடு பதிவு,
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளீர் போராளிகள் அணிவதைப்போல ஆடை அணிந்து கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு வருகை தந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரிடம் இன்றைய தினம் கோப்பாய்  பொலிஸ்  நிலையத்தில்  பொலிசாரினால் வாய் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது,

கடந்த 27 ம் திகதி வடக்கு கிழக்கில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் எழுச்சியாக  இடம்பெற்றிருந்த நிலையில் கோப்பாய்  மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர் தின நிகழ்வுகள் விமரிசையாக இடம் பெற்றிருந்தது 

குறித்த நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் அணியும் ஆடையினை ஒத்த ஆடைகளை அணிந்தவாறு ஒரு சில சிறுவர்கள் மாவீரர் தினநிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள் 

 குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய

திருநெல்வேலி கலாசாலை வீதிமற்றும்  உரும்பிராய் மேற்கை வதிவிடமாக கொண்ட அறுவர் 

இன்று மாலை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரிடமும்  வாய் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார்  முன்னெடுத்து வருகின்றனர் 

எனினும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார்.