


மகாஜனா 17 வயதுப் பெண்கள் அணி
தேசிய உதைபந்தாட்டத்தில் சாம்பியன்
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி இன்று கொழும்பு களனிய பிரதேசசபை மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் பொலனறுவை பன்டிவெவ மகா வித்தியாலயத்துடன் மோதிய மகாஜனா 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.
இரண்டு கோல்களையும் அணித்தலைவி லயன்சிகா முதல்பாதி ஆட்டநேரத்தில் உதைத்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.
வெற்றிபெற்று முதன்மை வீராங்கனைகளாக கல்லூரிக்கு பெருமைசேர்த்த மாணவிகளை வாழ்த்துவதோடு, இந்த வெற்றிக்காக பிரதம பயிற்றுநர் திரு.சி.சாந்தகுமார்(சாந்தன்) உதவிப் பயிற்றுநர் செல்வி இலக்சனா ஆகியோர் அயராது உழைத்திருந்தனர்,.