மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டுமாக இருந்தால் கூட்டணிகளோடு இணைய தயார்-மருதபாண்டி ராமேஸ்வரன்

0
144

நாட்டு மக்களுக்கும்இ மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் இடையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டுமாக இருந்தால் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி அமைக்கவிருக்கும் கூட்டணியோடு இணைந்து ஆதரவு வழங்குவதேஇ இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நோக்கமாக உள்ளது எனஇ இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியின் புனரமைப்பு பணிகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைத்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் ஜனாதிபதி செயலணியின் கல்விக்கான இணைப்பாளருமான கணபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவிகுழந்தை வேல், நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்கள், நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.