மக்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!

0
135

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10.30 மணியளவில் சிவப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும், கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்பிட்டி, கொழும்பு, காலி முதல் மாத்தறை வரையான கடற்பரப்பிற்குள் கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.