கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் அனைத்து கலைமன்றங்களையும் இணைத்து, பிரதேச செயலக மட்டத்தில் மாதந்தோறும் கலை, கலாசார நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வரும் நிலையில், மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் கலாசார நிகழ்வு இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிரதேசத்தில் வாழ்கின்ற பறங்கிய சமூகத்தின் கலை, கலாசார, சமூக விடயங்களை வெளிப்படுத்தும் முகமாக இந் நிகழ்வு ஒழுங்கமைப்பட்டிருந்தது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.நவநீதன் கலந்துகொண்டார்.
கௌரவ விருந்தினராக மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் டி.மலர்ச்செல்வன் பங்கேற்றார்.