கொரோனா தாக்கத்தின் விளைவுகளை அறியாத பலர் முக்கிய இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் மக்கள் அசட்டையாக இருப்பதாக அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
இதேவேளை, வசதி குறைந்த தேவையுடையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தாமாக முன்வந்து உதவும் மனநிலையை உருவாக்கி கொள்ளவேண்டும் என அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்
அம்பாறை ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.