மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வதில் நிச்சயமற்ற நிலை : எதிர்க்கட்சி தலைவர் சஜித்

0
25

இந்த ஆண்டின் கடந்த 16 நாட்களில் மாத்திரம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தரவுகளுக்கு அமைய, வெளிநாடு சென்றுள்ளவர்களில் 188 பேருக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 63 பேர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு பாதாள உலக குழு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பாதாள உலக செயற்பாடுகளை உடனடியாக ஒழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.