மட்டக்களப்பு பாசிக்குடாவில் ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.
‘இலங்கையில் மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் வலுப்படுத்த ஊடகவியலாளர்களை ஈடுபடுத்தல்’ என்ற தொனிப்பொருளில்,
நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு ஊடக மையம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில், ஜக்கிய அபிவிருத்தி நிதியம் அனுசரணை வழங்கியது.
பயிற்சி கருத்தரங்கில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தெரிவு செய்யபப்பட்ட ஊடகவியலாளர்கள்; பங்குபற்றினர்.
இரு நாள் நடைபெற்ற பயிற்சி கருத்தரங்கில், பிரதான வளவாளராக சட்டத்தரணி கு.ஜங்கரன் கலந்து கொண்டார்.