மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார அலுவலகம் நாவற்குடா பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்போது 79 பேருக்கு .சி.ஆர் பரிசோதனைகளுக்கான மாதிரிகள் பெறப்பட்டதுடன் 13 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்
மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் நாவற்குடா பொதுச் சுகாதார உத்தியோகத்தர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.