மட்டக்களப்பில் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

0
365

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் சிறந்த எதிர்காலத்திற்கான உள்ளுர் முயற்சிகள் எனும் மனிதாபிமான தொண்டு நிறுவனத்தினால் பயணக்கட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டத்திற்கு ‘ மனித நேயம ; நம்பிக்கை நிதியத்தின்’ நிதி அனுசரணையில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிண்ணியடி மற்றும் கும்புறுமூலை கிராமசேகவர் பிரிவுக்குட்பட்ட 100 குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும 1500 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் கிராம சேவகர் முன்னிலையில்
கையளிக்கப்பட்டது.

மண்முணை வடக்கு மண்முணை தென்மேற்கு பட்டிப்பளை,
கோறளைப்பற்று தெற்கு கிரான், கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று வடக்கு வாகரை ஆகிய பிரதேச பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட
575 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திருமதி ஐhனு முரளிதரன் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தார்கள்