மட்டக்களப்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு

0
380

கொரோனா தொற்றில் இருந்து கற்பிணித்தாய்மார்களை பாதுகாத்தல் கற்பிணி தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் இ. உதயகுமார் தலைமையில் தாதிய உத்தியோகத்தர்களின் வழிகாட்டலின் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட கருவப்பங்கேணி தாய் சேய் நல பணிமனையில் நடைபெற்றது.

இதன்போது கொரோனா தொற்றில் இருந்து கற்பிணி தாய்மார்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது தொடர்பான ஆலோசனைகளும் தாய்மார்களுக்கான முகக்கவசம் மற்றும் கிருமி தொற்றுநீக்கிகளும் வழங்கி வைக்கப்பட்டது.