மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்றைய தினம் 12 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் கொரனா தொற்று காரணமாக வயோதிப பெண்னொருவரும் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
இன்று காலை மட்டக்களப்பு, பயனியர் வீதியில் உள்ள வீடொன்றில் 84வயதுடைய பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.
இவரின் உடலம்அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்ட போது அவருக்கு கொரனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் இதுவரையில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கொரனா மரணங்கள் இடம்பெற்றுள்ளதுடன் இதில் 36வயதுடைய ஏழு மாத கர்ப்பிணிப்பெண்ணும் அடங்குதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாகடர் நா.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.