தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட முறைப்படி சிங்கள நெறிக்கு சொந்தமான நிலட் நிகட் நிறுவனத்தின் பணிப்பாளர் பிரசாத் ஆர் ஹேரத் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலும் அமைய மாவட்ட செயலகம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்கள் கொண்ட சிங்கள மொழி பயிற்சி நெறி மட்டக்களப்பில் நடைபெற்றது
மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட 150 மணித்தியாலங்கள் சிங்கள மொழி பயிற்சியினை நிறைவு செய்த உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியின் இறுதி நாள் கலாசார நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று நடைபெற்றது .
இந்நிகழ்வில் அரச அலுவலகம் மற்றும் திணைக்கள அதிகாரிகள் அதிதிகளாக கலந்துகொண்டனர்