சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுதல் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும் மகஜர் கையளிப்பு நிகழ்வும் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது
அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உரிமை தொடர்பாக பணியாற்றுகின்ற சிவில் அமைப்பக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளாகள்; மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியாக கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் இடம்பெறுகின்ற சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கியமான ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுகின்ற நிலைமைகள் மற்றும் சிவில் அமைப்பை சேர்ந்தவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே, இவ்வாறான அச்சுறுத்தல் செயற்பாடுகளினால் சமூக செயற்பாட்டாளர்களை உருவாக்குவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன், இளைஞர்கள் சமூக செயற்பாடுகளை மேற்கொள்வதிலும் பின்வாங்குகின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணையகத்திற்கு முன்னால் இன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்ட கவனஈர்ப்பு போராட்டம் தொடர்பாக மகஜர் ஒன்றும் மனித உரிமை ஆணைக்குழு அலுவலக உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டது.