மட்டக்களப்பில் தபால் திணைக்களத்தால் கல்விச் சுற்றுலா ஏற்பாடு

0
160

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தின், கோறளைப்பற்று வடக்கு கல்வி கோட்டத்தின்
கிரிமிச்சோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் மாங்கேணி கொக்குவில் தமிழ் வித்தியாலயம் ஆகிய
பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுலாவில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தினால் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் இந்தக்
கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்விச் சுற்றுலாவிற்கு வருகை தந்த மாணவர்கள், மட்டக்களப்பு அஞ்சல் அலுவலகத்திற்கு வருகை தந்தபோது, அஞ்சல்
திணைக்கள அதிகாரிகளால் வரவேற்கப்பட்டனர்.
கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி காமினி விமலசூறிய ஆலோசனையின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட
பிரதேச அஞ்சல் அதிபதி சோமசுந்தரம் ஜெகன் தலைமையில் சுற்றுலா ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு அஞ்சல் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதி அஞ்சல் அதிபதி ,அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள்,
பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.