தொற்றா நோய்க்கு எதிராக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் தொற்றா நோய்க்கான விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டி சவாரி மற்றும் விழிப்புணர்வு நடைபவனி இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் , மாவட்ட தொற்றா நோய் பிரிவுடன் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம் ,மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம் மாணவர்கள் மற்றும் மாமாங்கம் பொதுசுகாதார பரிசோதகர் பிரிவு ஆகிய இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொற்றா நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி சவாரி மட்டக்களப்பு நகர் காந்திபூங்கா வரை இடம்பெற்றதுடன் தொடர்ந்து பாடசாலை மாணவர்களுடன் இணைந்த விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
ஜி.சுகுணன் வழிகாட்டலின் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன். பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மாநகர ஆணையாளர் எம்.தயாபரன். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வைத்திய அதிகாரிகள்,தாதிய உத்தியோகத்தர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.