மட்டக்களப்பில் துவிச்சக்கரவண்டி சவாரி குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது .
தற்போதுநாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள்தட்டுப்பாட்டு நிலையினை சாத்தியமான முறையில் எவ்வாறு கையாளுவது தொடர்பாக அறிவுறுத்தும் வகையிலும் தமது பயணத்தை சாத்தியமாக்கும் வகையிலும் மாணவர்கள் ,பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மத்திய கல்லுரி மற்றும் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர தேசிய பாடசாலை பழைய மாணவர்களின் ஒழுங்கமைப்பில் பாடசாலைகளின் அதிபர்கள் தலைமையில் பாடசாலை மாணவர்கள் கல்லூரி சாரணர் மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மத்திய கல்லூரி அதிபர ;பாஸ்கரன் ,மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை அதிபர் உதயகுமார் தவதிருமகள் ஆகியோரின் தலைமையிலே முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி சவாரி பயணத்தில் பாடசாலைகளின் பழைய மாணவர் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , சாரணர் மாணவர்கள் ,ஆசிரியர்கள் , பாடசாலைகளின்மாணவர்கள்எனபலர்பங்குபற்றிஇருந்தனர் .